
கனவெல்லாம் நனவாகும்
மதுரையில் – ஜூலை 15ம் தேதி
உங்களது மனதின் வலிமையை உணர்ந்து பிரபஞ்ச பேராற்றலின் துணையுடன் நிறைவான வாழ்க்கை வாழ…
மாறுபட்ட ஒரு நாள் பயிலரங்கம்….
எமது அடுத்த நிகழ்ச்சிகள்…
மாதம் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படுகிறது. நேர்முக பயிற்சி வகுப்புகள் அல்லாது ஆன்லைன் வழி வகுப்புகள் (குறிப்பாக வெளிநாடு வாழ் அன்பர்களுக்கு வசதியாக) நடத்தப்படுகிறது. அடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளின் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. அன்பர்கள் அவரவருக்கு தகுந்த, விருப்பமுள்ள நிகழ்ச்சியை தேர்ந்தெடுத்து பதிவு செய்து கொள்ளலாம்

கனவெல்லாம் நனவாகும்
மதுரை – 15.07.2018
மதுரை – 15.07.2018
மதுரையில் நமது அடுத்த கனவெல்லாம் நனவாகும் பயிற்சி வரும் ஜூலை 15ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சி பற்றி கூடுதல் தகவல் பெறவும், பதிவு செய்யவும் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.

கனவெல்லாம் நனவாகும்
சென்னை – 29.07.2018
சென்னை – 29.07.2018
சென்னையில் நமது மூன்றாவது கனவெல்லாம் நனவாகும் பயிற்சி வரும் ஜூலை 29ம் தேதி நடக்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சி பற்றி கூடுதல் தகவல் பெறவும், பதிவு செய்யவும் கீழே உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.
எங்கள் பயிற்சி வகுப்புகளைக் குறித்து சில துளிகள்..
மனித மனதின் மகத்துவத்தை புரிந்து கொண்டவர்கள், அந்த மனமானதை பிரபஞ்ச சக்தியோடு இணைத்து இயக்கி தமது வாழ்வை வளமாக்கிக் கொள்கிறார்கள். தமது வாழ்வின் நோக்கத்தை புரிந்து கொண்டு அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்கிறார்கள். எதிர்மறையை களைந்து நேர்மறையில் திளைத்து சீர்மிகு வாழ்வை வாழ்கிறார்கள். ஆனால் மனம் என்பது என்ன, அதன் மகத்துவம் என்ன, அதை எப்படி நம் வாழ்வில் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க பயன்படுத்துவது என்று தெரியாதவர்கள் வாழ்வில் திக்குமுக்காடி போகத்தான் செய்கிறார்கள். ஈர்ப்பு விதி உட்பட அனைத்து பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டவர்கள் அனைத்தும் ஒரே இயக்கம் என்று புரிந்து கொண்டவர்கள் மனவளமாகட்டும், பொருள்வளமாகட்டும் ஒருங்கே பெற்று சீரிய வாழ்வு வாழ்கிறார்கள்.

இவை பற்றிய அறிவை பெரியோர் பலர் நேரடியாகவும், பரிபாஷை பாடல்களாகவும், உருவகக்கதைகளாகவும் சொல்லி சென்றுள்ளனர். அண்டத்திலும் பிண்டத்திலும் இருக்கும் மூலம் ஒன்றே என்றும் புரிய வைக்க முயன்றுள்ளனர். விஞ்ஞானமும், மெய்ஞ்ஞானமும் ஒன்றிணையும் மையப்புள்ளி ஒன்றே என்று எடுத்துரைத்துள்ளனர். இந்த உடல்-மனம்-ஆன்மா என்பதைக் குறித்த பெரியோரின் வாக்குகள் ஆராயப்பட்டு, அதை இன்றைய வாழ்வியலில் எப்படி பயன்படுத்திக் கொள்வது, நமக்குள் எல்லாம் வேரறுத்து உண்மையான ஆன்மதரிசனம் எப்படி பெறுவது, என்பதைத் தான் நமது பயிற்சிகள் செயல் வழி சொல்லித் தருகின்றன. ஆன்ம தரிசனம் பெற்ற மனிதர், சொர்க்கமும் நரகமும் இங்கே தான் என்று புரிந்து கொள்கின்றனர். மனதின் வலிமை அவருக்கு புரிகின்றது. அருவில் இருந்து தமக்கு வேண்டுவதை உருவாக்க அவர் கற்றுக் கொள்கின்றார். அவர் பேராசை வயப்படுவதில்லை. நமது அனைத்து பயிற்சிகளும் இந்த நோக்கத்திலேயே, இந்த வடிவிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன. நமது பயிற்சிகள் எந்த மதத்தையோ, இனத்தையோ சாராமல் மனித மனத்தை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளன. எல்லாம் வல்ல இறைபேராற்றல் அனைவருக்கும் ஒரு போலே துணை போகிறது, ஆனால் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது நாம்தான் எனும் அடிப்படை கருத்தை முன்வைத்து அதை சரியாக செய்வது எப்படி என்ற கல்வியை பயிற்றுவிக்கின்றோம். வாழ்வில் வேண்டுவன பெற ஆழ்மனசக்தியை பயன்படுத்த பயிற்சி தருகிறோம்.
-
இப்பயிற்சிகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம்
-
எந்த ஒரு தியானம் அல்லது யோகப்பயிற்சியின் கூடவும் செய்யலாம்
-
விஞ்ஞானத்தால் மெய்ஞ்ஞானத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிமுறைகள் ஆரோக்கியம், பொருள்வளம், மற்றும் உறவுமுறைகளில் மனம் விரும்பும் எந்த மாறுதலையும் அடையலாம்
-
மனம் சகல சௌபாக்கியத்தோடு, சந்தோஷம், சமாதானம் பெற்று உலகில் எல்லாவருடனும் நல்லிணக்கம் பெற்று வாழலாம்
Online Courses @ Alpha at Omega
We are in the process of creating Various Courses on Mind Power, Cosmic Laws, Life Purpose Mastery, Holistic Living and more taught by experts in the field. These courses will help you live your life to its fullest. The courses will be available shortly. However to know whats happening at the moment you can joing our mailing list. Whenever a course is available we will let you know. Please join our courses mailing list by clicking the button below.
Frequently Asked Questions
சில கேள்விகள்
இந்த பயிற்சிகள் ஈர்ப்பு விதியை பற்றி சொல்லித் தருகிறதா?
நமது பயிற்சிகள் ஈர்ப்பு விதியை மட்டும் சார்ந்தது இல்லை. அடிப்படையில் எந்த பிரபஞ்ச விதியாக இருந்தாலும் மனித (ஆழ்)மனதின் ஒப்புதலோடு மட்டுமே சரியாக நாம் விரும்பிய வண்ணம் செயல்படும். எனவே நமது பயிற்சிகள் பெரும்பாலும் மனதின் சக்தியை உணர்த்துவதாகவே அமைந்திருக்கும்.
நான் வெளிநாட்டில் வாழ்கிறேன், என்னால் நேரடி பயிற்சிகளில் கலந்து கொள்ள முடியாது. என்ன செய்வது?
கவலை வேண்டாம். இந்த விஷயத்தை மனதில் நிறுத்தியே நமது ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வெபினார்கள்(Webinars), மற்றும் நமது உறுப்பினர் தளத்தில் கிடைக்கும் ஆன்லைன் வீடியோ பயிற்சி வகுப்புகள் மூலம் தாங்கள் பயன் பெறலாம்.
இந்த பயிற்சி வகுப்புகளின் கட்டணம் மற்றவரை காட்டிலும் குறைவாகவே உள்ளது. இதன் தரம் எப்படி இருக்குமோ என சிந்திக்க வைக்கிறது.
எந்த விதத்திலும் நீங்கள் கற்று கொள்ளும் விஷயத்தின் தரம் குறையாது. வாழ்வில் சொல்லித்தரும் விஷயங்களை உபயோகித்து பயன் பெற்ற அனுபவசாலிகளே நமது பயிற்சியாளர்களாக நியமிக்கிறோம். முதலாவது எங்களது நோக்கம் பணம் அல்ல. நாம் கற்றுக் கொண்ட விஷயத்தை சரியாக மற்றவருக்கும் பலன் தரும் விதத்தில் பகிர வேண்டும் என்பதே நோக்கம். அரங்கு வாடகை, பயிற்சி புத்தகம் அச்சாக்குதல், இந்த வலைதளம் அமைப்பது போன்ற சில தொழில்நுட்ப அமைப்புகளுக்கு பணம் தேவைப்படுகிறது. அதையே கட்டணமாக வசூலிக்கிறோம். இந்த செலவுகள் போக வரவினங்களை நமது ஃபௌண்டேஷன் வழி மனித நேயத்திற்கு செய்யும் நல்ல காரியங்களுக்காகவே செலவு செய்கிறோம்.
வாழ்வில் என் சவால்களை சந்திக்க பயிற்சியாளர்களால் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனைகள் வழங்கப்படுமா?
நமது பயிற்சிகள் தனிப்பட்ட ஆலோசனைகளுடன் இணைத்தே வடிவமைக்கப்படுகின்றன. இதைத்தாண்டி ஆலோசனை நேரம் ஒதுக்கப்பட விரும்பினால் பயிற்சிகளுடன் இணைந்து அதற்கான சிறிய கட்டணம் (பொதுவாக பயிற்சியுடனே இணைக்கப்பட்டிருக்கும்)செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கான கட்டணம் செலுத்தி விட்டேன். அதற்கான ரசீது மற்றும் இதர தகவல்கள் எப்படி பெறுவேன்?
பொதுவாக ஒரு பயிற்சிக்கு/நிகழ்ச்சிக்கு எமது கட்டண செயலி (Payment Processor) மூலமாக தங்களுக்கு அனுப்பப்படும் ரசீது போதுமானது. பயிற்சி பதிவுக்கான எமது ஈ-மெயில் தங்களுக்கு 24 மணி நேரத்திற்குள் அனுப்பி வைக்கப்படும். பதிவு செய்யும் நேரத்தில் நீங்கள் அளித்த ஈ-மெயில் முகவரி மற்றும் அலைபேசி/வாட்ஸாப் எண்ணிற்கு நிகழ்ச்சி/பயிற்சி குறித்த தகவல்கள், நிகழ்ச்சிக்கு 4 நாட்கள் முன்னர் அனுப்பி வைக்கப்படும்.
எனக்கு மேலும் சந்தேகங்கள் உள்ளது. யாரை எப்படி அணுகுவது?
நிகழ்ச்சிகள்/பயிற்சி குறித்த தகவல்களுக்கு எப்போதும் eventsupport@alphaatomega.com என்ற ஈமெயில் முகவரியில் எங்களை அணுகலாம். கூடியபட்சம் 24 மணி நேரத்திற்குள் தங்களுக்கு பதில் அளிக்கப்படும். அலுவல் நேரங்களில் வாட்ஸாப் மூலமாகவும் எங்களை அணுகலாம்.
மேலும் தகவல்கள்/உதவிக்கு
தங்களுக்கு மேலும் நிகழ்ச்சி குறித்த தகவல்கள் மற்றும் இதர உதவிகளுக்கு எங்கள் Support Deskஐ அணுகலாம்
பாதுகாப்பு அம்சங்கள்
எங்கள் தளத்தில் நீங்கள் அளிக்கும் தங்களது விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. தாங்கள் செலுத்தும் கட்டணத்தின் விவரங்கள் எங்களுக்கு சேவை அளிக்கும் கட்டண செயலிகளால் (Payment Processors) SSL முறையில் பாதுகாக்கப்படுகின்றன.

இணையத்தில் ஒன்றிணைவோம்
ஆல்ஃபா அட் ஒமேகா ஃபேஸ்புக், டிவிட்டர், மற்றும் இதர சோஷியல் மீடியாவில் அமைவு பெற்றுள்ளது. அவற்றில் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ளுங்கள்
© Copyright 2018 – Alpha at Omega Foundation for Human Excellence
All Rights Reserved